திருச்சிராப்பள்ளி, ஜூலை 23 - திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர், பகவதிபுரம் பகுதி களுக்கு குட்செட் ரோடு அருகே பாதாள சாக்கடைக்கு உந்து நிலையம் அமைப்பதற்காக குழித் தோண்டப்பட் டது. இதில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வேலை நடைபெற்று வரு கிறது. தற்போது அந்த குழியில் நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் அந்த குழியை சுற்றி முறையாக பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்காததால் சனிக்கிழமை காலை மூதாட்டி ஒருவர் அந்த கழிவுநீர் தொட்டி யில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மூதாட்டியின் உறவினர்கள், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர், மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து, கழிவுநீர் தொட்டியை மூடா மல் அஜாக்கிரதையாக நடந்து கொண்ட எல் அண்ட் டி நிர்வாகத்தை கண்டித் தும், மூதாட்டியின் இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பாதாள சாக்கடை பணியை உரிய பாதுகாப் புடன் விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மூதாட் டியின் உடலை வாங்க மறுத்து போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திய நாதன் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில், ஒரு மாத காலத்திற் குள் பாதாளச் சாக்கடை நீர் உந்து நிலை யத்தினை கட்டி முடிப்பது. அதுவரை கழிவுநீர் தொட்டியை சுற்றி வேலி அமைப்பது, காவலர் நியமித்து இரவு நேரங்களில் விளக்கு எரிய விடுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவாக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டிருந்த மூதாட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினார். மேலும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் மூலமாக இழப்பீடு தொகை பெற்றுத் தருவதாக உறுதி யளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.