கரூர், மார்ச் 15- கரூர் மாவட்டத்தில் 12,72,500 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட்டு பரா மரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.த.பிரபுசங்கர் தெரிவித்தார். கரூர் மாவட்டம் இனங்கூர், சத்திய மங்கலம், பண்ணப்பட்டி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட் டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப் பட்டு பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றைப் பார்வையிட்ட ஆட்சியர் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் சத்தியமங்கலம் கிராமத்தில் அனாதீனம் நிலத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள், பண்ணப்பட்டி கிராமத்தில் கல்லாங்குத்து நிலத்தில் 9.11 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம், இனுங்கூர் கிராமத்தில் வேளா ண்மை துறைப் பாதுகாப்பில் உள்ள நிலத் தில் 74 ஏக்கர் பரப்பளவில் மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராம ரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. கனிம வளத்துறை சார்பில் இரண்டு லட்சம், கரூர் மாநகராட்சி உட்பட்ட பல பகுதி களில் 25 ஆயிரம் மரக்கன்றுகள், புகலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1,300, பள் ளப்பட்டி நகராட்சி உட்பட்ட பகுதிகளில் 1,800, குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,300, பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு இடங்களில் 50,650, பேரூ ராட்சிகள் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம், நெடுஞ்சாலைத் துறை சார்பில் பல்வேறு சாலைப் பகுதிகளில் 6,700, சுகா தாரத் துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் 500, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ஒரு கிராம பஞ்சாயத்திற்கு குறைந்தது 10,000 மரக்கன்றுகள் வீதம் 157 ஊராட்சிகளுக்கு நான்கு லட்சம் என கரூர் மாவட்டம் முழுவதும் வனம் பகுதிகளை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம் படுத்தவும் 12 லட்சத்து 72 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டு பரா மரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை நம் குழந்தைகளை போல் பராமரித்து சோலைவனமாக மாற்றுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்றார் ஆட்சியர்.