districts

குமரி மாவட்ட சுற்றுலா தலங்கள் திறப்பு 23 நாட்களுக்கு பிறகு பயணிகள் உற்சாகம்

நாகர்கோவில், ஜன.30- கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பெருந் தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவத் தொ டங்கியதும் கடந்த 7 ஆம்தேதி மூடப்பட்ட சுற்றுலா தலங்கள்  ஞாயிறன்று திறக்கப்பட்டன. கொரோனா மூன்றாவது அலையின்  ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தொடர்ந்து சில கட்டுப் பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கும் இரண்டு  ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டது. வாரத்தின் கடைசிநாட்களில்  வெள்ளி, சனி மற்றும்ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட் கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் சுற்றுலா  தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு 30 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.  இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை பகு திக்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு ஞாயிறன்று  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளும் திறந்து விடப்பட்டுள்ளன. 23 நாட்களுக்குபிறகு கன்னியாகுமரி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சென்று கடலின் இயற்கை அழகை பார்த்து ரசித்தனர். கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு  அனுமதி அளிக்கப்பட்டாலும் படகு போக்குவரத்துக்கு  அனுமதி வழங்கப்படவில்லை. இதனால்  விவேகா னந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப் பாலம், சொத்த விளை கடற்கரை, வட்டக் கோட்டை கடற்கரை, குளச்சல் கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப்பட்டனர். திற்பரப்பு அருவியில் குளிப்ப தற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரு வியில் குளிப்பதற்கு கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.