districts

img

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

நாகர்கோவில், ஜூன் 25- கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. விழாவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதில் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி என 3 பிரிவு களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பேச்சுப் போட்டியில் நடுநிலைப் பள்ளிகளுக் கான பிரிவில் சூரங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மோனிஷா, உயர்நிலை பள்ளிகளுக்கான பிரிவில் ஆளூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுகைனா, பாத்திமா, மேல்நிலை பள்ளிகளுக்கான பிரிவில் கோட்டாறு கவிமணி அரசு மேல் நிலைப் பள்ளி மாணவி நிவேதா ஆகியோர் முதல் பரிசுகளை பெற்றனர். கவிதைப் போட்டியில் நடுநிலைப்பள்ளிகளுக்கான பிரிவில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. மகளிர்உயர்நிலை பள்ளி மாணவி பரத், உயர்நிலைப் பிரிவில் வல்லங்குமரன்விலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கரிஷ்மா பாக்கியம், மேல்நிலைக்கான பிரிவில் கோட்டாறு கவிமணி பள்ளி மாணவி ஆஷிகா பிரியதர்ஷினி ஆகியோர் முதல் பரிசுகளை பெற்றனர். இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன், நகர் நல அதிகாரி விஜய்சந்திரன், மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.