குலசேகரம், ஜன.27 - கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதி மக்களின் கோரிக்கைகளை முன் வைத்து சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குலசேகரம் பேருந்து நிலை யத்திலிருந்து மங்கலம் செல்லும் சானல்கரை சாலை யில் கான்வென்ட் பள்ளிக் கூடம் பின்புறம் உடைந்து கிடக்கும் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்திட கேட்டும், குண்டும் குழியுமாக காணப் படும் குலசேகரம் பேருந்து நிலையத்தை நவீன முறை யில் சீரமைத்திட கேட்டும், குலசேகரம் பேருந்து நிலை யத்தின் அருகில் உள்ள குளத்தை சீரமைத்து பொழுதுபோக்கு பூங்கா அமைத்திட கேட்டும், அலெக்சாண்டர்புரம் விளையாட்டு மைதானத்தை நவீனப்படுத்தி சீரமைத்திட கேட்டும், தும்பகோடு கருக்கச்சி குளத்தை சீர மைத்து பக்கச்சுவர் அமை த்து மேம்பாடு செய்து பொது மக்கள் செல்வதற்கு பாதை வசதி செய்திட கேட்டும், மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி தும்பகோடு கிளை கள் சார்பில் தும்பகோடு பி கிராம அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடை பெற்றது. திற்பரப்பு பேரூராட்சி 18 வது வார்டு உறுப்பினர் சுதா தலைமை தாங்கி னார். சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஆர்.செல்லசுவாமி துவக்கி வைத்து உரை யாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், வட்டாரச் செயலாளர் பி.விஸ்வம் பரன், மாவட்டக்குழு உறுப்பி னர் என்.ரெஜீஸ்குமார் உள்ளிட்டோர் பங்கெடுத்த னர்.