காஞ்சிபுரம்,ஏப்.8- அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரி உள்ளிட்ட நிலுவைக்காக சிறைப்பிடி க்கப்பட்ட 62 வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரம் வட்டார போக்கு வரத்து அலுவலக அரசு வாகனமும் ஏலம் விட முடிவு செய்யப்பட் டுள்ளது. அதன்படி வருகிற 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விலை நிர்ணய குழுவினால் ஏலம் விடப்படும். ஏலம் விடப்படும் வாகனங்களின் விவரங்கள் உள்ளிட்டவைகளை வட்டார போக்குவரத்து அலுவ லகத்தில் வேலை நாட்களில் பார்வையிடலாம். உரிய கட்டணம் செலுத்தி ஒப்பந்த படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு வட்டார போக்குவரத்து அலுவல கக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.