districts

கள்ளக்குறிச்சியில் இளைஞர் திருவிழா

கள்ளக்குறிச்சி, டிச. 22- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அதிக வேலை வாய்ப்புகள் உள்ள தொழில்கள் குறித்து இளை ஞர்கள் அறிந்துகொள்ளவும் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்க வும் அரசுத் துறைகளையும் தனி யார் நிறுவனங்களையும் ஒருங்கி ணைத்து ஊராட்சி ஒன்றிய அளவில் இளைஞர் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா சனிக்கிழமை (டிச. 24) தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 8ஆம் வகுப்பிற்கு மேல் படித்தவர்கள் 35 வயதுக்குட்பட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளும் அனைவரும் தங்களுக்கு விருப்பபுள்ள திறன் பயிற்சியை தேர்வு செய்து பயிற்சி பெற லாம். பயிற்சிக்குப் பிந்தைய வேலை வாய்ப்பை பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும். மேலும், சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்க ளுக்கு அரசு திட்டங்கள் பற்றிய விவரங்களை முகாமில் அறிந்து கொள்ளலாம். தகுதி யான அனைத்து ஆண், பெண் இரு பாலரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள லாம் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.