கள்ளக்குறிச்சி, பிப். 20- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் திங்களன்று (பிப். 20) நடைபெற்றது. இதில் முதி யோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, விதவை உதவித் தொகை, சாலை வசதி, ஆதர வற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல். தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப் பட்டன. மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப் பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை வட்டம், நெய்வனை கிராமத்தில் இந்து ஆதியன் (பூம்பூம் மாட்டுக் காரன்) இனத்தைச் சேர்ந்த 2 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டன. மேலும், அரசுப் பணியின்போது உயிரிழந்த அரசு பணியாளர்கள் 7 பேரின் வாரிசுதாரர்களுக்கு கிராம உதவியாளர், இளநிலை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான பணி நியமன ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கரடிசித்தூர் கிராமத்தில் 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், கள்ளக் குறிச்சி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் 7 பேருக்கு நல வாரிய அட்டையையும் வழங்கப் பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலு வலர் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) டி.சுரேஷ், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சு.சந்தர் ராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஜெ. ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணை யர் ந.குமரன், மாவட்ட தாட்கோ மேலாளர் அ. ஆனந்தகோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.