districts

img

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி

சிதம்பரம், பிப் 13- சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குகநாதன் தலைமை தாங்கினார்.  காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் கலந்து கொண்டு பேசுகையில், “ மாண வர்கள் தேர்வு நேரங்களில் ஏற்கனவே படித்ததை மறுபடியும் சீராக படித்து எழுதிப் பார்க்கவேண்டும். படித்ததை ஆழமாக பதியவைக்க வேண்டும். இப்படி மாணவர்கள் நேரத்தை கணக்கீட்டு படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். மாணவர்கள் எந்த நிலையிலும் தன்னம்பிகையை இழக்காமல் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் பனை நலவாரிய உறுப்பினர் பசுமைவளவன், சுவாமி சக ஜானந்தா ஐஏஎஸ் அகடாமியின் நிறுவனர் நீதிவளவன், சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் நடராஜன், ஆசிரியர் மன்ற செயலாளர் மலைராஜ், விடுதி காப்பாளர் பழனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.