கடலூர், மார்ச் 29 - ஓய்வு பெற்ற எல்ஐசி ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் 30 விழுக்காடு உயர்த்த கோரி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் கடலூர் எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பென்சன் திட்டத்தை தொடர கோரியும், காப்பீட்டு துறை ஓய்வூதியர்களுக்கும் ஒன்றிய அரசின் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவது போல எல்லா பலன்களும், சலுகைகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலி யுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிங்காரவேலன் தலைமை தாங்கினார். சங்கத்தின் வேலூர் கோட்ட செயலாளர் வி.சுகுமாரன், பொரு ளாளர் டி.மணவாளன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ரமணி(வங்கிஊழியர்சங்கம்), பால கிருஷ்ணன்(பிஎஸ்என்எல் ஓய்வு), அரிகிருஷ்ணன்(அரசு ஊழியர்சங்கம்), காசிநாதன் (அரசு ஊழியர்க ஓய்வூதியர்சங்கம்) உள்ளிட்ட பலர் பேசினர்.