சிதம்பரம், மே 11- கடலூர் சிப்காட் பகுதி-3 காயல் பட்டு மற்றும் பெரியகுப்பம் கிராமங் களில் அமைந்துள்ளது. இங்கு 1700 ஏக்கர் நிலப்பரப்பில் 20 ஆண்டுகளு க்கு முன்பு நாகார்ஜூனா என்கிற எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணி கள் நடைபெற்று வந்தன. ஏறத்தாழ 75 விழுக்காடு பணிகள் முடிந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு வீசிய தானே புயல் காரணமாக இந்த தொழிற்சாலை பெரும் பாதிப்புக்குள் ளானது.அதன்காரணமாக தொழிற் சாலை அமைக்கும் பணிகளை நிர்வாகம் கைவிட்டது. ஆனாலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட் கள் இந்த ஆலை வளாகத் திற்குள் இருந்த நிலையில் தொழிற் சாலை காவலர்கள் அதனை பாது காத்து வந்தனர். சமீப காலமாக இந்த தொழிற்சாலை க்குள் இருக்கும் பொருட்களை கொள் ளையர்கள் இரவு பகல் பாராமல் கொள்ளை அடித்து வருவதாக கூறப்படு கிறது. இதுகுறித்து தொழிற்சாலை நிர் வாகம் அளிக்கும் புகாரின் பேரில் காவல்துறையினர் அப்போது சென்று தொழிற்சாலைக்குள் கொள்ளை யர்களை விரட்டுவது கைது செய்வது, பொருட்களை மீட்பது போன்ற பணி களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், புதனன்று (மே 11) அதிகாலை தொழிற்சாலையில் கொள்ளையர்கள் புகுந்து உள்ளதாக தொழிற்சாலை காவலர்கள் புதுச்சத்தி ரம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர். இதனைத்தொடர்ந்து, தொழிற்சாலை காவலர்களும் புதுச் சத்திர காவலர்களும் கொள்ளையர்கள் இருக்கும் பகுதிக்கு சென்றனர். அப்போது 20 கொள்ளையர்கள் அந்த பகுதியில் இருந்து திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசினர். அந்த குண்டுகள் காவலர்கள் இருந்த இடத்திற்கு சற்று முன்னதா கவே விழுந்து வெடித்தது. 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்த நிலையிலும் காவலர்களை கொள்ளையர்களை துரத்திச் சென்றனர். ஆனாலும் 20 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிசிடிவி காட்சிகளையும் காவல்துறை யினர்ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஹால்டியா’ எனப்படும் பெட்ரோலிய நிறுவனத்தி டம் விற்கப்பட்டது.சுமார் ரூ.50,000 கோடியில் இங்கு புதிய தொழிற்சாலை அமையும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இது போன்ற சர்ச்சைகளால் ஆலை அமைவது கேள்விக்குறியாகி உள்ளது.