districts

img

சிதம்பரம் அருகே 500க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது

சிதம்பரம், நவ 13- சிதம்பரம் அருகே தொடர் கனமழை யால் 500க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது இதனை தமிழக வேளாண் துறை அமைச்சர் வல்லம்படுகை யில் ஆய்வு மேற்கொண்டார் சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார கால மாக விட்டு விட்டு மழை பெய்துள்ள நிலை யில் 2 நாட்களாக தொடர் அதிக கன மழை 31 செ.மீ பெய்தது.  இதனால்  வல்லம் படுகை, கடவாச்சேரி, வேளகுடி,அகர நல்லூர் பழைய நல்லூர் பொன்னாங் கண்ணி மேடு நாஞ்சலூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தண்ணீர் தேங்கியுள்ளது மேலும் தற்போது வீராணம் ஏரியில் திறந்து விடப்படும் தண்ணீர் வினாடிக்கு 6000 கனஅடி வந்ததால் உடனடியாக தண்ணீர் வடிய வழி யில்லாமல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலை ஓரத்திலும், மேடான பகுதிகளிலும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள இ சேவை மையம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அறிந்த  தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சம்பந்தப்பட்ட வல்லம் படுகை பரதேசிஅப்பர் கோவில் தெரு வில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது தண்ணீர் நிற்பதற் கான காரணம் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். பின்னர் உடனடியாக தண்ணீர் வடிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார். இவருடன் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி காவேரி டெல்டா விவசாயிகள் சங்க பாசன சங்க தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.