districts

img

எம்.புதுரில் பேருந்து நிலையம்: குடியிருப்போர் சங்கத்தினர் எதிர்ப்பு

கடலூர்,ஜன.13- எம்.புதூரில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதிதாக அமைய உள்ள பேருந்து நிலை யம் தூரமாக இருப்பதால், அங்கு செல்வதற்கு மக்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டி நிலை ஏற்படும். எனவே கடலூர் பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும். மாநகராட்சி வல்லுநர் குழு அளித்துள்ள அறிக்கையில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரி அருகிலிருந்து   4 கிலோ மீட்டர் சுற்றளவில் எதுவும் அமைய கூடாது என பசுமை தீர்ப்பாய விதி உள்ளது. புதிய பேருந்து நிலையம் அமைக்கும் முடிவு அதை மீறுவதாக உள்ளது.  எனவே தற்போதைய பேருந்து நிலையத்தையே விரிவுபடுத்தி நவீனப்படுத்த வேண்டும்  என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திலகர், ரமேஷ், ரவிக்குமார், கோபால் (காங்கிரஸ்), வி.சுப்புராயன், ஆர்.அமர்நாத், எஸ்.கே.பக்கிரான் (சிபிஐஎம்), குளோப், நாகராஜ், பாக்கியம் (சிபிஐ), மூர்த்தி, பாபு கணேஷ் (மக்கள் நீதி மையம்), எம்.மருதவாணன், பி.வெங்கடேசன், தேவநாதன் (குடியிருப்போர் சங்கம்), சேகர் (மதிமுக), இஸ்மாயில் (இ.யூ.மு.லீக்), ரஹீம் (மமக), மன்சூர் (மஜக), பாலு, ரவி (மக்கள் அதிகாரம்), ரவி, குரு ராமலிங்கம், (மாநகர அனைத்து பொது நலச் சங்கம்), சுப்பராயன் (மீனவர் பேரவை), குமார், திருவரசு (பொதுநல இயக்கம்), ரமேஷ் (விடுதலை வேங்கை) ஆகியோர் பேசினர். கோரிக்கை நிறைவேற வில்லை என்றால் மாநகராட்சி தீர்மான நகல் எரிக்கும் போராட்டம் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.