கடலூர், செப். 13- பரங்கிப்பேட்டையில் சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ்கண்ணன், மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் ஆகியோர் மாவட்ட ஆட்சியிரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி யிருப்பதாவது: கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை நகரம் பெரும்பான்மையாக இஸ்லாமிய மக்கள் வசிக் கும் பகுதியாகும். வரலாற்று ரீதியாக கடந்த காலங்களில் மதநல்லிணக் கத்தோடு மக்கள் வாழ்ந்து வரும் ஊராகும். இது வரை அப்பகுதியில் மத ரீதியான பதற்றங்கள் ஏற்பட்டதில்லை. இந்துக் களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழும் இவ்கூரில் கடந்த சில தினங்களாக தேவை யற்ற பதற்றம் நிலவி வரு கிறது. விநாயகர் சதுர்த்தி அன்று ஏற்பட்ட விரும்பத்த காத சம்பவங்களின் காரண மாக ஒரு சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை விழிப்போடு இருந்திருந்தால், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்திருக்காது. அதனைத் தொடர்ந்து 12.9.2022 காலை பாஜக வடக்கு ஒன்றி யத் தலைவர் முருகன் என்ப வரின் வீட்டின் வெளியே நின்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுள்ள னர். இதையடுத்து பரங்கிப் பேட்டை பகுதியில் ஒருவித பதற்றம் நிலவி வருகிறது. எனவே உடனடியாக பெட் ரோல் குண்டு வீசிய உண்மை யான குற்றவாளிகளை விரைந்து கைது செய்தால் தான் சூழ்நிலை சீராகும். இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு சில சமூகவிரோத சக்திகள் பிரச்சனைகளை உருவாக்க முயற்சி எடுக்கக்கூடும். இது இரு சமூகத்திற்கு இடையிலான பிரச்சனை எனக் கருதி இந்து அமைப்பு களையும், இஸ்லாமிய அமைப்புகளையும் மட்டும் அழைத்து பேசினால் போதாது. எனவே அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து சமூக நல்லிணக் கத்தை நிலைநாட்ட தாங்கள் ஆவன செய்யு மாறு கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.