சிதம்பரம், நவ 19- சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக பெய்த கன மழையால் நீர் நிலைகள் நிரம்பி யது. இதனால் வாய்க்கால்க ளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலை யில் கீரப்பாளையம் ஒன்றி யத்திற்குட்பட்ட தாதம்பேட்டை கிராமத்தை சேர்ந்த அம்புஜம் என்பவரது வீட்டின் அருகே வாய்க்கால் உள்ளதால் அதில் அடித்துக்கொண்டு வந்த 5 அடி நீளம் முதலை வீட்டிற்குள் புகுந்துவிட்டது. இரவு நேரத்தில் கண்விழித்து பார்த்த போது முதலை இருப்பதை கண்டு அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி னர். பின்னர் இதுகுறித்து வனத் துறையினருக்கு தக வல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த அதிகாரிகள் முதலை மீது ஈர கோணியை போட்டு லாவகமாக பிடித்து அதனை கயிறால் கட்டி சிதம்ப ரம் அருகே உள்ள வக்கரமாரி ஏரி யில் விட்டனர்.