districts

கடலூர் மாவட்டத்தில்  கொரோனா தொற்று அதிகரிப்பு

கடலூர்,ஜூலை 6- தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. இதனால் சென்னை மாநாகராட்சி சார்பில் முககவசம் அணிய வேண்டும் என்று பொது மக்களுக்கு உத்தர–விடப் பட்டுள்ளது. முக–கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படு கிறது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடை பிடித்து முகக் கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.  அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றுபற்றி விழிப்புணர்வு ஏற்படுபத்தப்பட்டு வருகிறது. என்றாலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இம் மாதம் 1 ஆம் தேதி 13 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களோடு சேர்த்து 43 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், தற்போது 85 பேருக்க கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. கொரோனா பரவலை–யொட்டி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.