கடலூர், ஆக.18- கடலூர் மாவட்டத்தில் அதிவேகமாக பரவி வரும் கொரானா தொற்றை தடுக்க கிராமங்கள் தோறும் மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறு முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மத்திய மாநில அரசுக ளின் பொதுமுடக்க உத்தரவி னால் பாதிக்கப்பட்ட அனைத்து ஏழை குடும்பங்க ளுக்கும் ரூ.7500 நிதி உதவி யும், இலவச உணவு பொருட் களும் வழங்க வேண்டும். இ-பாஸ் முறையை ரத்து செய்து, பேருந்து போக்கு வரத்தை படிப்படியாக துவக்க வேண்டும். பிசிஆர் பரிசோதனைகளை அதிகப்ப டுத்த வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த வாறு பிசிஆர் கருவியை காலதாமதமின்றி செயல் பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் பர வலாக மக்களுக்கு காய்ச் சல், இருமல், சளி போன்ற பிரச்சனைகள் உள்ளது. கிராமம் வாரியாக, நகர வார்டு வாரியாக மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும். நடமாடும் மருத்துவக் குழுக்களை அதி களவில் இயக்க வேண்டும். பிசிஆர் டெஸ்ட் எடுத்த வர்களுக்கு நெகட்டிவாக இருந்தால் சம்பந்தப்பட்ட வர்களுக்கு முறையாக தக வல் வழங்கவும், இணைய வழியாக தெரிந்துகொள்ள வும் ஏற்பாடு செய்ய வேண் டும். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி அந்த ஆணை யத்திடமிருந்து கொரோனா தொற்று பாதித்த குடும் பங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். அறிகுறி இல்லாமலேயே பாசிட்டிவ் வரும் நோயாளிகளுக்கு வீட்டிலிருந்து தனிமைப்ப டுத்திக் கொள்ளவும், சிகிச்சை அளிக்கவும் ஏற் பாடு செய்யப்பட்டு வருகி றது. அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தலித்துகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். விளை பொருட்களுக்கு கட்டுப்படி யான விலை வழங்கவும், அவர்களின் கடனை தள்ளு படி செய்ய வேண்டும். பிரதமரின் கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசார ணைக்கு உத்தரவிட வேண் டும். மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆகஸ்ட் 26 அன்று மாவட்டம் முழுவதும் 500 மையங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.