கடலூர், மே 24- கடலூரில் ஏற்கனவே தேர்வு செய்யப் பட்டுள்ள இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க கோரி கடலூர் அனைத்து குடியி ருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பேருந்து நிலையம் 5 ஆயிரம் மக்க ளுக்கு வாழ்வாதாரமாக இருப்பதால் அதை நகர பேருந்து நிலையமாகவும் மற்ற வேண்டும், புறவழி சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் நகராட்சி அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கூட்டமைப்பின் தலைவர் பி. வெங்கடேசன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.மருதவாணன், நிர்வாகிகள் கோமதிநாயகம், கல்யாண்குமார், அப்பாதுரை, ராஜா, ஆறுமுகம், காசி நாதன், ரவிச்சந்திரன், கண்ணபிரான், கோபால், சண்முகம், ரங்கநாதன், பச்சையப்பன், மாரியப்பன், மஞ்சினி, வீராசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.