districts

கோட்டைகுளத்தில் விஷவாயு தாக்கி தீயணைப்புத் துறையினர் பாதிப்பு: ஒருவர் பலி

திண்டுக்கல். பிப்.10- திண்டுக்கல் கோட்டை குளத்தில் குப்பைகள் பல மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன.  இந்த நிலை யில் வெள்ளியன்று கோட்டை குளத்தில் தவறி விழுந்த சிறுவன் லிங்கேஸ்வரனை காப்பாற்றுவதற்காக தீயணைப்புத்துறையினர் 3 பேர் பிரத்யேக பகுதியில் இறங்கியதால் விஷவாயு தாக்குதலுக்கு ஆளாகி மயங் கினர். இதனையடுத்து அந்த சிறுவன், மற்றும் காப்பாற் றச்சென்ற 3 தீயணைப்புத் துறை ஊழியர்களையும் திண்டுக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டனர். இதில் சிறு வனை காப்பாற்ற குளத்தில் இறங்கிய அவரது தந்தை வெற்றி வேல் பலியானார்.