தருமபுரி, நவ.30- நூறுநாள் வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்க மறுப்பதாக முத்துப்பட்டி கிராமப் பெண்கள் தருமபுரி மாவட்ட ஆட்சி யர் எஸ்.பி.கார்த்திகாவிடம் மனு அளித்து முறையிட்டனர். தருமபுரி மாவட்டம், செம்மாண்ட குப் பம் ஊராட்சிக்குட்பட்டது முத்துப்பட்டி கிரா மம். இங்கு ஏழை, எளிய நடுத்தர மக்கள் ஏரா ளமானோர் வசித்து வருகின்றனர். இந் நிலையில், இந்த ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. ஆனால், முத் துப்பட்டி கிராமத்துக்கு மட்டும் நூறு நாள் வேலை வழங்க தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாக அக்கிராமப் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளி டம் கேட்டால் நிதி இல்லை என அலட்சிய மாக கூறுவதாக தெரிவித்தனர். எனவே, முத் துப்பட்டி கிராம பெண்கள் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.