districts

img

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

தருமபுரி, நவ.23- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழந்த ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும். ஏற்கனவே, நடைமுறையில் உள்ள சனிக்கிழமை விடு முறை நாளாக அறிவிக்க வேண்டும்.

மருத் துவம் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர் களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்க அறிவித்த அரசாணையை அமல்படுத்த வேண்டும். கொரோனா பணி பார்க்கும் அனைத்துத்துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அரசுத் துறைகளில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை வகித் தார். இதில், சங்கத்தின் மாநில துணைத் தலை வர் கோ.பழனியம்மாள், மாவட்டச் செய லாளர் ஏ.சேகர், பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட இணை செயலாளர் சசி.காவேரி, மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன், வேளாண்மைத்துறை அமைச்சுப் பணி யாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ராணி தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செய லாளர் மா.பாலசுப்பிரமணியம், மாவட்ட இணை செயலாளர் தி.திலீப், தெற்கு வட்டக் கிளைச் செயலாளர் நாராயணன், பட்டு வளர்ச்சி அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் நாகராஜ், நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க கோட்டச் செயலாளர் ஆர்.ராமன், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி விஜயலட்சுமி, வருவாய்த் துறை அலுவலர் சங்க நிர்வாகி மதன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.