districts

அரிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க நிதி ஒதுக்கிடுக மக்களவையில் தருமபுரி எம்.பி., வலியுறுத்தல்

தருமபுரி, ஏப்.1- அரிதான நோய்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்க ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மக்கள வையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் மக்களவையில் பேசுகையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நிறுவப் பட்ட “நிதி திரட்டல் தளம்” ஒன்றை தொடங்கி ஒரு வரு டம் ஆகிவிட்டது. இருப்பினும், அரிதான நோய் சிகிச் சைக்கு தேவைப்படும் தொகையை ஒப்பிட்டு பார்த்தால் வெறும் ரூ.1,16,000 மட்டும் இதுவரை சேகரிக்கப்பட்டு இருக் கின்றன. 3 ஆம் நிலை என்று சொல்லக்கூடிய நோயாளிகள் மட்டும் 250 நபர்கள் சிகிச்சைக்காக பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் 50 நோயாளிகள் தங்கள் சிகிச்சையைத் தொடங்க அவசர உதவி தேவைப்படுகிறது. குறைந்தபட்ச மதிப்பீடுகளின் படியே, இதுவரை நான்கு  குழந்தைகள் கடந்த சில மாதங்களில் உயிர் இழந்துள்ள னர்.  எனவே, தேசிய ஆரோக்கிய நிதி திட்டத்தை  நீட்டிக்க  வேண்டும் என பல வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள் ளது. இந்த திட்டத்தின் மூலமாக நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அரசு முற்பட வேண்டும். இல்லை என் றால் நோயாளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறும். எனவே, உடனடி யாக மேற்கண்ட திட்டத்திலிருந்து குறைந்தபட்சம் குழு 3 ‘அ’ பிரிவில் காணப்படும் நோயான காச்சர் நோய், பாம்பே நோய், பேப்ரி நோய் மற்றும் எம்பிஎஸ்-I நோய்களுக்கு தேவைப்படும் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ் வாறு டி.என்.வி.செந்தில்குமார் எம்.பி., பேசினார்.