அமைச்சர் தகவல் சேலம், ஜன.20- அம்மாப்பேட்டை அரசு மருத் துவமனையில் புதிதாக சிறுநீரக சிகிச்சைப் பிரிவு துவங்க நடவ டிக்கை எடுக்கப்படும், என அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார். சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி மருத் துவமனையின் பல்வேறு சிகிச் சைப் பிரிவுகளில், மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங் களன்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர் களிடம் பேசுகையில், இந்த ஆய் வின்போது சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவமனை யில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தது டன், தொடர்ந்து மருத்துவமனை யினை சிறந்த முறையில் பராம ரித்து பணியாற்றிடும் வகையில் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி மருத் துவமனையை தவிர்த்து, பிற அரசு மருத்துவமனைகள், நகர்புற நல வாழ்வு மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகா தார நிலையங்களில் இதுவரை ரூ.39.98 கோடி செலவில் பல்வேறு மருத்துவக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.23.55 கோடி செலவில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங் களும், ரூ.3.63 கோடி செலவில் வாழப்பாடி அரசு மருத்துவமனை ஒருங்கிணைந்த அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டிட மும் என மொத்தம் ரூ.27.18 கோடி செலவில் 50 மருத்துவக் கட்டிடங் கள் கட்டும் பணி நடைபெற்று வரு கிறது. பொதுமக்கள் அரசு மருத்துவ மனைகளை அதிகளவில் பயன்ப டுத்தி வருகின்றனர். அந்தவகை யில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவம னையில் புறநோயாளிகளாக நாள் தோறும் 4,400க்கும் மேற்பட்டோர் மருத்துவச் சேவையைப் பெற்று வருகின்றனர். அம்மாப்பேட்டை அரசு புறநகர் மருத்துமனையில் கடந்த மாதம் வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற் றுள்ளனர். நாள்தோறும் 200க்கும் மேற்பட்டோர் இம்மருத்துவமனை யினைப் பயன்படுத்தி வருகின்ற னர். மேலும், இம்மருத்துவமனை யில் புதியதாக சிறுநீரக சிகிச்சைப் பிரிவு அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். ரத்த வங்கிப் பிரி வில் தமிழ்நாட்டிலேயே திருச்சி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக ரத்த கொடையாளர்கள் அதிகள வில் சேலம் மாவட்டத்தில் உள்ள தால், இதற்கென இவ்வளாகத்தில் தனி கட்டிடம் அமைத்துத்தர வேண்டுமென கோரிக்கை வைத் துள்ளனர். மேலும், காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்பிடவும் கோரி யுள்ளனர். அதேபோன்று இரத்த பரி சோதனை செய்யும் இடம் மற்றும் அதன் முடிவுகளை பெறும் இடங் களை அருகருகே இருக்குமாறு மாற்றித்தர வேண்டுமென சிகிச் சைப்பெற வருகை புரிந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று விரைவில் 2,553 மருத்துவக் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான தேர்வுகள் முடிவுற்று விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது, என்றார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, மாநக ராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் ஜெ.தேவி மீனாள், மருத்துவக் கண்காணிப்பாளர் ரா.ராஜ்குமார் ஆகியோர் உடனி ருந்தனர்.