districts

img

மக்கள் மனங்களைத் தேடி வாலிபர் சங்க வாகனப் பயணம்

ஈரோடு, ஜன. 1- மக்கள் மனங்களைத் தேடி வாலிபர்  சங்க இருசக்கர வாகனப் பயணம்  சூளையில் நிறைவடைந்தது. இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் ஈரோடு மாவட்டத்தில் ஒடுக்கு முறையற்ற ஊர்கள், சமத்துவமுள்ள மனங்கள், மக்களின் மனங்களைத் தேடி  நடைபெற்ற 2 நாள் இருசக்கர வாகன  பிரச்சாரப் பயணம், சூளையில் புதனன்று  நிறைவடைந்தது. வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன் தலைமையில் கவுந்தப்பாடியிலிருந்து துவங்கிய இரண்டாவது நாள் பய ணத்தை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டத் தலைவர் பி.பி.பழனி சாமி தொடங்கி வைத்தார். ஆப்பக்கூ டல், ஜம்பை, பவானி, காளிங்கராயன் பாளையம், சித்தோடு, நசியனூர், திண் டல், மூலப்பாளையம், சோலார், வெண் டிபாளையம், சூரம்பட்டி, சம்பத் நகர் மற் றும் வீரப்பன்சத்திரம் வழியாக சூளையை அடைந்தது. பிரச்சாரப் பய ணத்தை வாழ்த்தி வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் பாரதி சிறப்புரையாற்றி னார். முன்னாள் மாநிலச் செயலாளர் வேல்முருகன் நிறைவுரையாற்றினார்.  முன்னதாக, வாலிபர் சங்கத்தின்  பிரச்சாரப் பயணத்திற்கு காவல்துறை யினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி இப்பிரச்சார இயக்கம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.