districts

img

நல்லாறைத் தூர்வாரக் கோரி வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்

திருப்பூர், நவ.5 - திருப்பூர் ஆத்துப்பாளை யம் பகுதியில் அடிப்படைப் பிரச்சனைகளை சரி செய்யக்  கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தி மண்டல அலுவலகத் தில் மனு அளித்தனர்.  ஆத்துப்பாளையம் பகு தியில் சுகாதாரமற்ற நிலை யில் உள்ள நல்லாற்றை தூர்வார வேண்டும்.  குண்டும், குழியுமாக உள்ள சாலைகளைச் சீர மைக்க வேண்டும். ஜெய் நகர் செல்லும்  சாலையில் மாநகராட்சி குப்பை கொட்டப் படுவதை நிறுத்த வேண்டும். பாரதி நகரில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதவாறு சந் துக்குள் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயை அருகாமை இடத்திற்கு மாற்ற வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  ஆத்துப்பாளையம் கிளை சார்பில் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. பொதுமக்க ளிடம் கையெழுத்து பெற்ற படிவத்துடன் கோரிக்கை மனுவை இணைத்து செவ்வா யன்று வாலிபர் சங்கத்தினர் முதலாம் மண் டல அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிகழ்வில் வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் சந்தோஷ், ஒன்றியத் துணைச் செயலாளர் நரேந்திர பிரசாத், கிளைச் செய லாளர் லோகேஷ்வரன், கிளைத் தலைவர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.