districts

img

கவனத்தை ஈர்த்த வாலிபர் சங்க வீதித் திருவிழா

கோவை, ஜன.1- சாதி, மத, பாலின வேறுபாடு இல் லாத ஒரு புத்தாண்டை வரவேற்கும் வித மாக இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் நடத்திய வீதித் திருவிழா இளை ஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. புத்தாண்டை வரவேற்று, ‘பாசிச இருள் சூழ்ந்த இந்தியாவில் சமத்துவ ஒளியேற்றி, சாதி மதங்களை கடந்து மக்கள் ஒற்றுமையை காத்திடுவோம். சோசலிச லட்சியத்தை நனவாக்கிடு வோம்’ என்கிற முழக்கத்தோடு இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார் பில், கோவை காந்திபுரத்தில், புத் தாண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதி யாக வீதித் திருவிழா நடைபெற்றது.  தொட்டிபாளையம் ஜமாப் கலைக்குழு வினரின் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங் கிய இந்நிகழ்வில், வானவேடிக்கை மற்றும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங் களுடன் நடைபெற்றது. முன்னதாக, தபேலா கலைஞர் ஆர்தர் பிரதீப்பின் இசை நிகழ்ச்சி மற்றும் சிறுவன் அறி வழகனின் புல்லாங்குழல் இசை உள் ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. 2025 ஆண்டை வரவேற்கும் விதமாக இரவு 12 மணிக்கு சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன் கேக் வெட்டினார். இதனைத்தொடர்ந்து ‘மக்கள் ஒற் றுமை காப்போம்’ என்கிற உறுதியேற்பு  நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  மாவட்டத் தலைவர் எம்.விவேகானந் தன், மாவட்டச் செயலாளர் ஆர்.அர் ஜூன், மாவட்டப் பொருளாளர் தினேஷ்  ராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். முடிவில், வீதித்திருவிழாவை சிறப் பித்த கலைஞர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே‌.மனோகரன் சால்வை அணி வித்து கௌரவித்தார். புத்தாண்டை புது விதமாக வரவேற்ற வாலிபர் சங்கத்தின ரின் இந்நிகழ்வு இளைஞர்களின் கவ னத்தை ஈர்த்தது.