நாமக்கல், டிச. 3- நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண் களை ஆபாசமாக ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுப்ப தாக குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட் டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்குக்கரை கால்வாய் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் பணி யாற்றும் கேசவராஜ் என்பவர், தனது செல்போன் மூலம், பணி யாற்றும் பெண்களை ஆபாசமாக படம் எடுப்பதாக கூறப்ப டுகிறது. இதனையடுத்து செவ்வாயன்று, தட்டாங்குட்டை ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பா தலைமையில் குமார பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித் தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.