திருப்பூர், செப். 20 - தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நி லைப் பள்ளி மாணவிகளுக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தனர். விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லி அருகே நொய்டாவில் அகில இந்திய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற் றது. இதில் திருப்பூர் அங்கேரிபாளையம் சாலை கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவிகள் சத்யா, நிஷாந்தி ஆகியோர் முதல் பரிசாக தங்கப் பதக்கத்தை வென்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றியத் தலைவர் ஜி.ரேவந்த் குமார், ஒன்றியச் செயலாளர் அ.சந் தோஷ் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் மாணவிகள் இருவ ரையும் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்த னர்.