கோவை, ஜூலை 9- பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வணிகத்தை தனியார் நிறுவனங்களுக்கு மறைமுகமாக மடைமாற்றம் செய்வதை உட னடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என கோவையில் நடைபெற்ற கருத்தரங் கில் வலியுறுத்தப்பட்டது. பொதுத்துறை இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டு போராட்டக்குழு சார்பில் கோவை மாவட்டம், நஞ்சப்பா சாலையில் அமைந் துள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மண்டல அலுவலக கூட்டரங்கில் கருத் தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு போராட்டக்குழு கோவை மண்டல தலைவர் எஸ்.வி.சங்கர் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் எஸ்.சுரேஷ் வரவேற்றார். சிஐ டியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி துவக்க உரையாற்றினார். போராட்டக் குழுவின் கோரிக்கைகளையும், நோக்கங் களையும் விளக்கி தெற்கு மண்டல ஒருங் கிணைப்பாளர் எஸ்.சவரிமுத்து உரையாற்றி னார். அப்போது அவர் பேசுகையில், பொதுத் துறை நிறுவனங்களை பலப்படுத்த வேண் டும். பொதுத்துறை நிறுவனங்களில் மறுசீர மைப்பு என்கிற பெயரில் நிறுவனங்களை பல வீனப்படுத்தி, பின்னுக்குத் தள்ளுகிற முயற்சி களை தடுத்து நிறுத்த வேண்டும். இன்சூ ரன்ஸ் பாலிசிதாரர்கள் மற்றும் முகவர்கள் நலன்களை பாதுகாக்க வேண்டும் என வலியு றுத்தி விரிவான போராட்டத்திற்கான ஆயத்த கூட்டமாக இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது, என்றார்.
இக்கருத்தரங்கில் அனைத்து தொழிற்சங் கங்களின் மண்டல, மாநில, அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகையில், நான்கு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை யும் இணைத்து ஒரே கழகமாக உருவாக்கி, பொது இன்சூரன்ஸ் துறையை பலப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள் ளது. இவ்வாறு இணைப்பதன் மூலம் மக்க ளுக்கு குறைந்த விலையில், தரம் வாய்ந்த பொது இன்சூரன்ஸ் தேவையை வழங்க முடி யும். பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங் கள் ஆரோக்கியமாக போட்டியிட்டு, வாடிக் கையாளர் சேவையை மென்மேலும் உயர்த்த வேண்டும். மிகக்கடுமையான போட்டி சூழ லில் கோடிக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு வழங்கி வரும் சேவைகள் தங்கு தடையின்றி தொடரவும், தளத்தை விரிவுபடுத்தவும் நாடு முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மாறாக, பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்கு எதிராக அலுவலக குறைப்பு, ஆட்குறைப்பு, வணிகத்தின் அடி நாதமாக விளங்கும் முகவர்களின் வாழ் வாதாரம் சீர்குலைப்பு, பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வணிகத்தை தனியார் நிறு வனங்களுக்கு மறைமுகமாக மடைமாற்றம் என்கிற எண்ணத்தோடு செயல்படுவதை உட னடியாக ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும், என்றனர். இந்நிகழ்ச்சியில் அகில இந்திய ஜெனரல் இன்சூரன்ஸ் எம்ப்ளாயீஸ் அசோசியேசன் தெற்கு மண்டல பொதுச்செயலாளர் எ.குமார வேலு, கிளாஸ் ஒன் தென்மண்டல பொதுச் செயலாளர் ஜான்பால், அகில இந்திய இன்சூ ரன்ஸ் எம்ப்ளாயீஸ் அசோசியேசன் துணைத் தலைவர் ஜி.ஆனந்த், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆபீஸ் அசோசியேசன் பொதுச் செயலாளர் பி.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எம்.ஆறுமுகம் நிறைவுரையாற்றினார். எஸ்.கலைச்செல்வி நன்றி கூறினார்.