ஈரோடு, செப்.9- கடம்பூர் அருகே சகதி காரணமாக காட்டாற்றை பேருந்து கடக்க முடியாத தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக் கம்பாளையம் வனப்பகுதியில் கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாக்கம்பாளையத் துக்கு செல்லும் வனச்சாலை சேறும், சகதியுமாக இருக்கிறது. மாக்கம்பா ளையத்துக்கு செல்லும் வழியில் உள்ள சர்க்கரை பள்ளம், குரும்பூர் பள்ளம் ஆகிய பகுதியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இத னால் காட்டாறுகளிலும் சேறு மற்றும் சகதி அதிகளவில் படிந்து உள்ளது. இத னால் அரசு பேருந்து சர்க்கரை பள்ளம் வரை சென்றுவிட்டு பயணிகளை இறக்கி விட்டு அங்கிருந்து திரும்பி சென்று விடு கிறது. இதனால் மாக்கம்பாளையம், கோம்பையூர், கோம்பை தொட்டி மலை வாழ் மக்கள் தங்களுடைய கிராமங்க ளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படு கிறார்கள். வெள்ளநீர் காட்டாற்றில் வடிந்த பிறகு குழந்தைகளை தலையில் தூக்கி வைத்தபடி காட்டாற்றை கடக் கிறார்கள். இதேபோல் ஆபத்தை உணராமல் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளும் ஒருவரை ஒருவர் கைகோர்த்தபடி காட் டாற்று வெள்ளத்தை கடந்து செல்கிறார் கள். எனவே, மலைவாழ் மக்கள் நலன் கருதி குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள் ளம் ஆகிய பகுதிகளில் உள்ள காட்டாற் றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.