பள்ளிபாளையம், டிச.26- குமாரபாளையம் பகுதி யில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைவருக்கும் 20 சதவிகித பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், குமா ரபாளையத்தில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும், விசைத்தறி ஓட்டுபவர், தார் போடுபவர், பின் போடுபவர், சாயப்பட்டறை உள்ளிட்ட அனைத்துப்பிரிவு ஆண், பெண் தொழிலா ளர்களுக்கும் 20 சதவிகித பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில், குமாரபாளையம் நகரம் முழுவதும் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் நகர தலை வர் சரவணன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் நா.வேலுச் சாமி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன், மாவட்ட தலை வர் கே.மோகன், குமாரபாளையம் நகர செயலாளர் கே.பாலுசாமி, துணைச்செயலா ளர் வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கை களை உரையாற்றினர். இதைத்தொடர்ந்து இந்த பிரச்சார இயக்கம் ராஜம் தியேட்டர், சத்யாபுரி, காந்திபுரம், சந்தைப்பேட்டை, காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்றது. இந்த இயக்கத்தில் சங்கத்தின் நிர் வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.