districts

img

திருப்பூர் மாவட்ட அறிவியல் இயக்க மாநாடு

புதிய நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர், நவ. 25 – தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட 5ஆவது மாநாடு திருப் பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் ஞாயிறன்று நடைபெற்றது. துவக்க நிகழ்வில் மாநில செயலாளர் ஸ்டீபன்நாதன் சிறப்புரை ஆற்றினார். திருப்பூர் மாவட்ட அறிவியல் இயக்கத்தின் இரண்டு ஆண்டு செயல்பா டுகள் குறித்த அறிக்கையை மாவட்ட செய லாளர் தினேஷ், நிதிநிலை அறிக்கையை மேனாள் மாவட்ட பொருளாளர் கார்த்திக் ஆகியோர் சமர்ப்பித்தனர். நிறைவு நிகழ் வில் மாநில தலைவர் பேராசிரியர் தினகரன், இன்றைய சூழலில் மக்கள் அறிவியல் இயக்கத்தின் தேவையும், செயல்பாடுகளும் என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். மாவட்ட தலைவராக ஜெய லட்சுமி, துணைத்தலைவர்களாக ஆ.சிகா மணி, பா.கனகராஜா, தண்டபாணி, சீரங்க ராயன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். மேலும், செயலாளராக தினேஷ், இணை செயலாளர்களாக அப்துல் ஜெலில், ராஜேஷ் குமார், வே.கார்த்திக், செல்வி, பிரேமா ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட் டனர். பொருளாளராக கௌரிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.  மாநில செயலாளர்கள் தியாகராஜன், ராமமூர்த்தி ஆகியோர் பங் கேற்றனர். இம்மாநாட்டை தமுஎகச மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் வாழ்த்திப் பேசினார். அறிவியல் இயக்கத்தினர் ஆர் வத்துடன் கலந்து கொண்டனர்.