சென்னை, மே 21-தமிழகத்தை உலுக்கிய தூத்துக் குடி துப்பாக்கிச்சூடு பயங்கரம் நடந்துஓராண்டு ஆகிறது. ஸ்டெர்லைட்கார்ப்பரேட் கம்பெனிக்காக எளியமக்களின் உயிரைப் பறித்தமோடி - எடப்பாடி அரசாங்கங்களின் கொடிய தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கண்டன நாளாககடைப்பிடிக்கப்படுகிறது. இதை யொட்டி தூத்துக்குடியில் கண்டன நிகழ்வுகள் நடைபெற உள்ளன. துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும் கொல்லப்பட்ட தியாகி களுக்கு அஞ்சலி செலுத்தியும் கண்டனக் குரல் எழுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தூத்துக்குடி மக்களுடைய வாழ்வாதார பாதிப்புக்கு காரண மான ஸ்டெர்லைட் ஆலையை மூடவற்புறுத்தி பல கட்ட போராட்டங் களை நடத்தி வந்தனர் பொதுமக்கள். கடந்த ஆண்டு மே 22 அன்று இந்தஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள், மீனவர்கள், விவ சாயிகள், வியாபாரிகள் அமைதியான முறையில் ஊர்வலமாக சென்ற போது, அவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினர். தலை, நெற்றி, மார்பு, கழுத்து என குறி வைத்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி மொத்தம் 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மட்டுமின்றி சில நூறு பேர் தடியடி யால் படுகாயம் அடைந்தனர். தமிழக காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலால் மரணமடைந்த 15 பேரின் குடும்பத்தாருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும்ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூரச்சம்பவம் நடந்து ஓராண்டுநிறைவடைந்த போதிலும், மக்கள்மனதிலும், உயிரிழந்த, ஊன மடைந்த குடும்பங்களின் மனதிலும் இச்சம்பவம் ஆறாத ரணமாக உள் ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓராண்டு முடிவடைந்தும் இது வரை நீதி கிடைக்காததும் மிகுந்தவேதனையாக உள்ளது. ஆயிரக்கண க்கான பொதுமக்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படுகொலையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது எந்தவித விசாரணையோ, நடவடிக்கையையோ இதுவரை எடுக்காமல் மக்கள் விரோத அரசாக எடப்பாடி அரசு இருந்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.ஸ்டெர்லைட் ஆலையை எப்படியாவது திறப்பதற்கு வேதாந்தா நிறு வனம் மத்திய, மாநில அரசுகளின் உதவியோடு முனைந்து வருகிறது. வேதாந்தா நிறுவனத்திற்கு எதி ராகவும், இந்த ஆலையை நிரந்தர மாக மூட வேண்டுமென்றும் வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து போராடி வருகிறது.
சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உயிர் - வாழ்வாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்கிட வேண்டு மென்றும், உயிரிழந்த 15 பேருக்கும் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மாக மூடுவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இக்கோரிக்கை களுக்காக போராடும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஆதரவாக எப்போதும் துணை நிற்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு காரணமான தமிழக அரசைக் கண்டித்தும் இன்று (மே 22) கண்டன குரல் எழுப்பிட வேண்டுகிறோம்.