tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம்.... அனுசரிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி.....

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டுநடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி  தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பேச்சிமுத்து, ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சங்கரன், குமாரவேல், காசி, பூமயில், முத்து, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன், மாநகர் குழு ஆறுமுகம், ஜேம்ஸ் உள்ளிட்டபலர் உயிரிழந்தோரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.