districts

img

தாவரவியல் பூங்காவில் திருவள்ளுவர் சிலை

உதகை, ஜன.1- உதகை தாவரவியல் பூங்காவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. கன்னியாகுமாரியில் கடல் நடுவே உள்ள திரு வள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி  பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுவர் சிலை  அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதால், வெள்ளி விழா  கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குமரியில் திருவள்ளு வர் சிலை வெள்ளி விழா நடைபெற்றது. திருவள்ளுவர்  சிலை வெள்ளிவிழாவை பிரபலப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உதகை அரசு  தாவரவியல் பூங்காவில் மாவட்ட நிர்வாகம் சார்பில்  திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. தினசரி ஆயி ரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர்  சிலையை பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.  மேலும், அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்க ளில் வெளியிடுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத் தினர் கூறுகையில், 6 அடி உயரத்தில் தாவரவியல் பூங்கா வில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு உள்ளது.  அடுத்த ஒரு சில மாதங்கள் திருவள்ளுவர் சிலை பூங்கா வில் இருக்கும், என்றனர்.