பொள்ளாச்சி, டிச.12- பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் உள்ள நகர் மன்ற துவக்கப் பள்ளியின் கதவிலுள்ள பூட்டுகள் உடைந்து பாதுகாப் பின்றி உள்ளதால் காப்பாளரை நியமிக்க வேண்டும் என அப்பகுதிப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - பல்ல டம் சாலை, நந்தனார் காலனியில் நகர்மன்ற துவக்கப் பள்ளி பத்து ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியானது கோவை மாவட்ட ஆட்சியரின் பங்களிப்பு நிதி ரூ.5 லட்ச மதிப்பீட்டில் 2010-11 ஆம் கல்வி யாண்டில் புதியதாக கட்டப்பட்டது. இப்பள் ளியில் 2019-20 கல்வியாண்டில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பொது முடக் கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மூடப்பட்டது.
இச்சூழலில், இப்பள்ளி யின் நுழைவு வாயில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பள்ளியின் வளாகத்தில் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படு கிறது. எனவே, இப்பள்ளிக்கு இரவு காவ லர் மற்றும் தூய்மைப் பணியாளர் ஆகி யோரை பணியில் அமர்த்தி உரிய பராம ரிப்பை மேற்கொள்ள வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.