திருப்பூர், ஜூலை 9 - வெளிச்சந்தையில் தக் காளி விலை கிலோ ரூ. 100க்கு மேல் விற்பனை செய் யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், உழவர் சந்தை யில் விலை குறைத்து விற் பனை செய்யப்பட்டது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாய மக்களிடம் தக்காளி கொள்முதல் செய்து, உழவர் சந்தை மூலம் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதன்படி திருப்பூர் தெற்கு, உடுமலை மற்றும் பல்லடம் உழவர் சந்தை களில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய் யப்பட்டது. திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் மொத்தம் 320 கிலோ தக் காளி கொள்முதல் செய்து விற்பனை செய்யப் பட்டது. பல்லடம் உழவர் சந்தை யில் ஒரு கிலோ தக்காளி ரூ.85க்கு விற்பனை செய் யப்பட்டது. உடுமலை யில் ஒரு கிலோ தக்காளி ரூ.79க்கு விற்பனை செய் யப்பட்டது.