திருப்பூர், மே 21 - திருப்பூரில் செவ்வாயன்று பெய்த மழை காரணமாக கல்லம்பாளையம் பகு திக்குச் செல்லும் ஒற்றைக்கண் பாலம் பகுதி யில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காலேஜ் ரோட்டில் இருந்து இப்பகுதிக் குச் செல்லும் பிரதான பாதையாக இருப்ப தால் கல்லம்பாளையம் பகுதி கடும் பாதிப் பைச் சந்திக்கிறது. வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், இங்குள்ள குடியிருப் புவாசிகள் வந்து செல்வதும் முடங்கிப் போகி றது. ஒவ்வொரு மழைக் காலத் திலும் சாதாரண மழை பெய்தாலே கல்லம்பாளை யம் பாலம் துண்டிக்கப்பட்டது போல் ஆகிறது. குறிப்பாக வடக்குப் பகுதியில் இருக்கும் வார்டுகளில் இருந்து கழிவு நீர் வந்து நொய்யல் ஆற்றுக் குச் செல்லும் வடிகாலாக வும் இந்த தடம் இருப்ப தால் வழக்கமான காலங்களில் கழிவு நீர் வருவதுடன், மழைக்காலத்தில் மழைநீரும் சேர்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு இங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இப்பி ரச்சனைக்கு மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர் தீர்வு கண்டு மழைகாலப் பாதிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று கல்லம்பா ளையம் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.