districts

img

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம், ஜூலை 15- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது.  கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இந்நிலையில், வியாழ னன்று அணைக்கு விநாடிக்கு 107 கன அடி  தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், வெள்ளியன்று அணைக்கு வரும் நீரின் அளவு 130 கன அடியாக இருந்த  நிலையில்,  சனியன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 142 கன அடியாக அதிகரித்துள்ளது.  இதனால், அணையின் நீர் மட்டம் 76.70  அடியாகவும், அணையின் நீர் இருப்பு 38.74  டிஎம்சி ஆகவும் உள்ளது. இந்நிலையில் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90ஆவது ஆண் டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 12 டெல்டா மாவட் டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் பாசன வசதி  பெறுகின்றன. மேட்டூர் அணையில் இருந்து  டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 10,000  கன அடியாக குறைக்கப்பட்டது. இது படிப் படியாக மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அணையின் நீர் இருப்பு 100 அடிக்கும் மேல்  உள்ளதால் குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.  தற்போது நீர் வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு  கீழ் சரிந்ததுள்ளது. மேட்டூர் அணையி லிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து  அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின்  நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப் பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கி யுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் 2,500 கன அடியாக 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத் திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத் தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர்  அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டு வருகிறது.