districts

img

கோவை : மாற்றுத்திறனாளி இளைஞர் யுபிஎஸ்சி தேர்வில் 750வது ரேங்க் எடுத்து தேர்ச்சி 

கோவை: கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்  தனது முதல் முயற்சியிலேயே , யுபிஎஸ்சி தேர்வில் , அகில இந்திய அளவில் 750வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் . 

கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ரஞ்சித் , பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் , காது கேளாதோர் பிரிவில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தவர் . அதன் பின்னர் , கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப் பிரிவில் , 80 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தவர். தற்போது , தனது முதல் முயற்சியிலேயே , யுபிஎஸ்சி தேர்வில் , அகில இந்திய அளவில் 750வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் .

இது குறித்துப் பேசிய அவர் , பள்ளியிலும் , கல்லூரியிலும் நல்ல மதிப்பெண்களையே எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தும் , கல்லூரி வளாக தேர்வில் ,  இவரின் குறைபாட்டைக் காரணம் காட்டி எந்த நிறுவனத்திலும் இவரைத் தேர்வு செய்யவில்லை என்று குறிப்பிட்டார்  ., இருந்தும் அவர் துவண்டுவிடாமல் , யுபிஎஸ்சி தேர்விற்குக் கடினமாகப் பயிற்சி பெற்றதாகக் கூறினார் . 

இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் 750வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்ற இவர் ,  மாற்றுத்திறனாளர் சமூகத்திற்கு உதவுவதையே தனது  நோக்கமாகக் கொண்டுள்ளார் . 

இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 36 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் .அதில் , கோவையைச் சேர்ந்த வி.எஸ்.நாராயண சர்மா என்பவர் அகில இந்திய அளவில் 33வது ரேங்க் எடுத்துத் தேர்ச்சிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .