districts

img

இரு சமூக மக்களிடையே மோதல்: அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.18- அரூர் அருகே இரு சமூக மக் களிடையே மோதல் ஏற்பட்ட நிலை யில், அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண் டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட் டம், கோட்டப்பட்டி அருகே உள்ள எஸ்.தாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அச்சுதன் (26). கால் நடை மருத்துவரான இவர் வியாழ னன்று இரவு பாலக்குட்டை கிரா மத்தை கடந்து இருசக்கர வாகனத் தில் சென்றுள்ளார். அப்போது நாய் குத்தி கிராமத்தைச் சேர்ந்த பூபா லன் உள்ளிட்ட பலர், அச்சுதன் வேக மாக சென்றதாகக்கூறி தகராறில் ஈடு பட்டுள்ளனர். இதையடுத்து அங்கி ருந்தவர்கள் இரு தரப்பையும் சமா தானம் செய்து அனுப்பியுள்ளனர். இதன்பின் பூபாலன் தனது கிராமத் தைச் சேர்ந்த உறவினர்களுடன், எஸ்.ததாம்பட்டிக்கு சென்றுள்ள னர். அங்கு ஊர் மேடையில் நடை பெற்றுக் கொண்டிருந்த பொங்கல் விழாவை பார்த்துக் கொண்டிருந்த வர்களை, பூபாலன் உள்ளிட்ட கும் பல் தாக்கியுள்ளது. இதையடுத்து ஊர் மக்கள் திரண்டு வருவதைக் கண்ட கும்பல், வாகனத்தை விட்டு  விட்டு ஓட்டம் பிடித்தனர். இதனி டையே பூபாலன் உள்ளிட்ட 7 பேர் மீது கோட்டப்பட்டி போலீசார் வழக் குப்பதிவு செய்து கைது செய்துள் ளனர். நேரில் வந்த அரசு அலுவ லர்கள் காவல்துறை அதிகாரிகள் இரு கிராமத்திற்கும் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சனியன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரூர் ஒன்றியச் செயலாளர் பி.குமார், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே. என்.மல்லையன், மாவட்ட நிர்வாகி கள் எஸ்.கே.கோவிந்தன், ஏ.நேரு, வெங்கடேசன், கோவிந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஜெயகாந்தன், எஸ்.அண்ணாமலை ஆகியோர் எஸ்.தாதம்பட்டி ஆதிதிராவிடர் சமூக மக்களிடையேயும், நாய் குத்தி மலைவாழ் மக்களிடையேயும் நடந்த சம்பவத்தை கேட்டறிந்த னர். இரு சமூக கிராம மக்களி டையே சுமூக உறவு ஏற்பட இப்பிரச் சனையில், அரூர் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி, மேலும் பிரச்ச னைகள் வராமல் தடுக்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.