districts

img

விடுவிக்கப்பட்ட மாணவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள உறுதி மாணவர் சங்கத்தின் காத்திருப்பு போராட்டம் வெற்றி

திருப்பூர், நவ.6- திருப்பூர் சின்னசாமிஅம்மாள் மாநக ராட்சி மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி சதவீ தத்தைக் காரணம் காட்டி 10, 11 ஆம் வகுப்பு  மாணவர்கள் மூன்று பேருக்கு மாற்று சான்றி தழ் வழங்கியதைக் கண்டித்து, இந்திய மாண வர் சங்கத்தினர் புதனன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்வித் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அந்த மாணவர்களை மீண்டும் பள்ளியில்  சேர்த்துக் கொள்வதாக உறுதியளித்தனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, சின்ன சாமிஅம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 10 மற்றும் 11 ஆம்  வகுப்பு மாணவர்கள் மூன்று பேருக்கு, தேர்ச்சி சதவீதத்தைக் காரணம் காட்டி பள்ளி  நிர்வாகம் அக்டோபர் மாதம் கட்டாயப்படுத்தி  மாற்றுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதுகு றித்து, பெற்றோர்கள் பள்ளியில் சென்று கேட் டதற்கு, ஒழுங்கின நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது மீண்டும் பள்ளியில் சேர்க்க முடியாது  என தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்ற போது, மாணவனை ஐடிஐயில் சேரும்படி  தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்திய  மாணவர் சங்கத்தினர் 10, 11 ஆம் வகுப்பு மாண வர்கள் மூன்று பேருக்கு மாற்று சான்றிதழ் வழங்கியதை கண்டித்தும், அத்துமீறி செயல் படும் எஸ்எம்சி தலைவர் மீது நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தியும் காத்திருப்புப் போராட் டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி புதனன்று மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கல்கிராஜ் தலைமை யில் சின்னசாமி அம்மாள் பள்ளி முன்பு காத்தி ருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து உதவி கல்வி ஆய்வாளர் தலைமையில் மாணவர் சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் பிரவீன்குமார், மாவட்டத் தலை வர் கல்கி ராஜ், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இரண்டு மாணவர் ்களை மீண்டும் பள்ளியில் சேர்த்துகொள்வ தாக பள்ளி நிர்வாகம் உறுதியளித்தது. மேலும், ஒரு மாணவன் விருப்பத்தின் அடிப்ப டையில் வேறு அரசுப்பள்ளிக்கு மாற்றக் கேட்டதும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து காத்திருப்பு போராட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த காத்தி ருப்பு போராட்டத்தில் மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், கண் ணன், விமல், மாதர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் வளர்மதி, வாலிபர் சங் கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.அருள், வடக்கு மாநகரச் செயலாளர் விவேக்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.