districts

img

தேர்வு கட்டணம் உயர்வு: மாணவர் சங்கத்தினர் போராட்டம்

சேலம், செப்.12- சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள தேர்வு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என  வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் சேலம்  அரசு கலைக்கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் பெரும் பாலான மாணவர்கள் கல்லூரி வேலை நேரம் முடிந்த வுடன் பகுதி நேர வேலைக்கு சென்று பயின்று வரக் கூடியவர்களாக உள்ளார்கள். இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், அதன் இணைவு பெற்ற அனைத்து அரசு கலைக்கல்லூரிகளுக்கும் தேர்வு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஊழல் முறை கேட்டில் ஈடுபட்ட பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழகத்தின் நிதி நிலை மையை சரி செய்வதற்கு தேர்வு கட்டணம் உயர்வு  என்ற பெயரில் மாணவர்களிடமிருந்து பணத்தை பறிக் கும் செயல், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. எனவே, உடன டியாக உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும் பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, வியாழனன்று சேலம் அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங் கத்தினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்கத்தின் அரசு கலைக்கல்லூரி கிளைச்  செயலாளர் கோகுல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சே.பவித்ரன் கண்டன உரையாற்றினார். இதில் சங் கத்தின் மாவட்ட இணைச்செயலாளர்கள் அபிராமி, டார் வின், செயற்குழு உறுப்பினர்கள் திவ்யா, நவீன், கிளை  நிர்வாகிகள் ஜீவா, சக்தி உட்பட திரளான மாண வர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கட்டண உயர்வை திரும்பப்பெறவிட்டால், பெரியார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிடுவோம், என மாணவர் சங்கத் தினர் தெரிவித்துள்ளனர்.