கோவை, டிச. 11- ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையை துவக்கக்கோரி அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கக் கூட்ட மைப்பு சார்பில் வெள்ளியன்று கோவை தலைமை பணி மனை முன்பு வேலை நிறுத்த ஆயத்தக்கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு எல்பிஎப் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். ஐஎன்டியுசி தலைவர் தெளத்கான், ஏஏஎல் எல்எப் விடுதலை ரவி, எல்பிஎப் நடராஜன், சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் எம்.கனகராஜ், ஏஐடியுசி செல்வ ராஜ், எச்எம்எஸ் ஜெகதீசன், டிடிஎஸ்எப் கார்த்திகேயன், எம்எல்எப் தியாகராஜன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில் சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் வேளாங்கண்ணி ராஜ் நிறைவுரை யாற்றினார். இக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.