districts

img

“வேண்டும் ஊராட்சி, வேண்டாம் மாநகராட்சி” சோமையம்பாளையம் பகுதி மக்கள் கையெழுத்து இயக்கம்

கோவை, ஜன.19- சோமையம்பாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் கையெ ழுத்து பெறும் இயக்கத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், கஸ்தூரி நாயக்கன் பாளையம், சோமயமைப்பாளையம், காளப்ப நாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 40 ஆயிரத்திற் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இந்நிலையில், இப்பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கவுள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி கூலித் தொழிலாளிகளுக்கு கிடைக்கும் 100  நாள் வேலை ரத்து செய்யப்படும். வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு உள்ளிட்ட பல  இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாகக்  கூடிய நிலை ஏற்படும். கிராம ஊராட்சிக்கு  வழங்கப்படும் இலவச குடிநீர் உள்ளிட் டவை கிடைக்காமல் போய்விடும். விவசாய  கூலித் தொழிலாளர்கள் பயன்பெறும் வகை யில் செயல்படுத்தப்பட்டு வரும் ஆடு, மாடு,  கோழி வளர்ப்பு திட்டங்கள் மாநகராட்சியில்  வசிப்போருக்கு கிடைக்காது.மேலும்,  ஊராட்சிக்கு கிடைக்கப்பெறும் ஒன்றிய,  மாநில அரசின் அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்படும். எனவே, “வேண்டும்  ஊராட்சி, வேண்டாம் மாநகராட்சி” எனக்கூறி  அப்பகுதி பொதுமக்கள் ஞாயிறன்று கையெழுத்து பெறும் இயக்கத்தில் ஈடு பட்டனர். தொடர்ந்து, திங்களன்று (இன்று) கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.