கோவை, ஜன.20- மாநில நெடுஞ்சாலை ஆணை யம் அமைக்க வெளியிடப்பட்ட அர சாணையை ரத்து செய்ய வேண்டும், என வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியா ளர் சங்கத்தினர் மக்களிடம் கையெ ழுத்து பெறும் இயக்கத்தில் ஈடுபட்ட னர். தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தால், தமிழ்நாட்டில் 52 சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு 3817 கோடி ரூபாய் சுங்க வரி வசூல் கொள்ளை நடக்கிறது. இதனை தடுக்க வேண் டும். தமிழ்நாடு அரசு மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைக்க வெளி யிடப்பட்ட அரசாணை எண்:140யை ரத்து செய்ய வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என 200க்கும் மேற்பட்ட சுங்கச்சாறு அமைத்து தனியார் வசூல் வேட்டை நடத்த அனுமதிக்கக்கூடாது. கிரா மப்புற இளைஞர்களுக்கு நெடுஞ் சாலைத்துறை காலிப்பணியிடங்க ளில் வேலை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தி னர் திங்களன்று பொதுமக்களை சந் தித்து, கையெழுத்து பெறும் இயக் கத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட் டம், பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த இயக்கத்திற்கு, சங்கத்தின் கோட்டத் தலைவர் வெற்றிவேல் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியம், மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தரம், கோட்டச் செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் சின்ன மாரிமுத்து, அரசு ஊழியர் சங்க பொள்ளாச்சி தாலுகா நிர்வாகி பத்மநாதன், சத்து ணவு ஊழியர் சங்கச் செயலாளர் அம்சவேணி, சத்துணவு ஊழியர் சங் கத் தலைவர் கீதா, அரசு ஊழியர் சங்க வட்டக்கிளைச் செயலாளர் கிட்டான் ஆகியோர் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று ஈரோடு மாவட் டம், கோபி பேருந்து நிலையப் பகு தியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு, கோட்டத் தலைவர் என்.முருகவேல் தலைமை வகித் தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.கதிரவன், கோட்டச் செயலாளர் இரா.கருப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.