districts

img

ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற தனித்தீர்மானம் - செல்வபெருந்தகை

கோவை, அக்.7- ஆனைமலை-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற சட்ட மன்ற கூட்டத்தொடரில் தனித்தீர்மானம் கொண்டு வருவோம்  என காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை உறு தியளித்தார். கோவை மாவட்டம், சூலூர் தாலுகா செஞ்சேரி புத்தூர்  பகுதியில் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆனை மலை - நல்லாறு திட்டப் பணிகளை நிறைவேற்ற கோரி  மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. கோவை வடக்கு மாவட் டத் தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ் மாநி லத் தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்று உரை யாற்றினார். அவர் பேசுகையில், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நிறைவேற்றப்படும் போதே ஆனைமலை - நல்லாறு திட் டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால்,  அணைகள் கட்டப்பட்ட சிறிது காலத்திலேயே காமராஜர் ஆட்சி இழக்கும் நிலை ஏற்பட்டது. இல்லாவிட்டால் சுமார்  60 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆனைமலை - நல்லாறு திட் டம் நிறைவேறி இருக்கும். வரும் சட்டமன்ற கூட்டத்தொட ரில் ஆனைமலை - நல்லாறு திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட வுள்ளது. இத்திட்டம் தொடர்பாக முதல்வரிடம் எடுத்துக் கூறி கண்டிப்பாக நிறைவேற்றி தர காங்கிரஸ் கட்சி அனைத்து வகைகளிலும் முன் நிற்கும் என்றார். இந்த  விழாவில், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம், கொடுங்கியம் பாசன சங்கத்தின் தலைவர் சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.