தருமபுரி, ஜூலை 5- தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிருந்து இரண்டு இலவச தாய்,சேய் ஊர்தியை டிஎன்விஎஸ்.செந்தில் குமார் எம்.பி., துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் அரூர், பாலக்கோடு, பாப்பி ரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார் களை வீட்டிற்கு இலவசமாக அழைத்துச் செல்வதற்கு தரும புரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022 – 2023 ஆம் ஆண்டு நிதியிருந்து இரண்டு தாய், சேய் ஊர்தி வாங்க தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன்விஎஸ்.செந்தில் குமார் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். அதன் அடிப்படையில், ஏசி வசதியுடன் கூடிய இரண்டு டெம்போ டிராவலர் தாய்,சேய் வாகனத்தை பயன்பாட்டிற் காக புதனன்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன் விஎஸ்.செந்தில்குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் அமுதவள்ளி, ஊரக சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் ஜெயந்தி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.