ஆவின் கடைகளில் தரமின்றி தேநீர் விற்பனை
தருமபுரி, நவ.9- ஆவின் கடைகளில் தரமின்றி தேநீர் விற் பனை செய்யப்படுவதாக, குறைதீர் கூட்டத் தில் விவசாயிகள் புகாரளித்தனர். தருமபுரி கோட்ட அளவிலான விவசாயி கள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. கோட்டாட்சியர் ரா.காயத்ரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விவசாய சங்கங்கள், அமைப்புகளின் பிரதி நிதிகள், முன்னோடி விவசாயிகள், விவசாயி கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், காரி மங்கலத்தை அடுத்த திண்டல் பகுதியில் உள்ள கும்பாரஅள்ளி ஏரிக்கு கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பைசாலி ஏரியில் ஆக்கிரமிப்பு களை அகற்றுவதுடன் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். இண் டூர் ஏரியில் குப்பைக் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட் லாம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலை ஆக்கிர மிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் நிறுவனம் மூலம் அனு மதி வழங்கப்பட்டு, தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் ஆவின் கடைகள் பலவற்றில் தேநீர் பானங்கள் தரமின்றி விற்பனை செய்யப்படு வதை தடுக்க நடவடிக்கை வேண்டும். விவ சாயிகள், பொதுமக்களின் எளிதான போக்கு வரத்துக்காக நாகர்கூடல் - நெக்குந்தி இடையே பேருந்து போக்குவரத்து வசதி ஏற் படுத்த வேண்டும். நீர்நிலைகளில் வளர்ந் துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும், என வலியுறுத்தினர்.
ஆன்லைன் மூலம் ரூ.77 லட்சம் மோசடி
கோவை. நவ.9. ஆன்லைன் மூலம் தனியார் நிறுவன ஊழி யரிடம் ரூ.77 லட்சம் மோசடி நடைபெற்ற சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த வர் வினோத் (50). இவர் தனியார் நிறுவனத் தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆன் லைன் டிரேடிங் மூலம் தொழில் செய்து லாபம் பெற முடிவு செய்தார். இதற்காக கூகுள் செய லிக்கு சென்று ஒரு பிரபல செயலியில் விண் ணப்பம் செய்தார். அப்போது வினோத்தின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர் இந்த செயலில் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி பணம் முதலீடு செய்யும்படி கூறியுள்ளார். அதை நம்பி கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 12 தவனைகளாக அவர்கள் கூறிய கணக்கில் ரூ.77 லட்சத்து 40 ஆயிரம் அனுப்பியுள்ளார். அப்போது அதில் லாபம் வருவது போல் அவர்கள் கணக்கு காட்டி உள்ளனர். ஆனால் அந்த பணத்தை வினோத் எடுக்க முயன்ற போது மேலும் பணம் கட்டினால் தான் கிடைக் கும் என்று கூறியுள்ளனர். இதனால் ஏமாற்றம டைந்த வினோத் அது குறித்து விசாரித்த போது பிரபல செயலியின் பெயரில் போலி யான செயலி உருவாக்கி தன்னிடம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் வினோத் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகராறில் 4 பேர் காயம்
நாமக்கல், நவ.9- அரசு மதுபானக்கடை யில் ஏற்பட்ட தகராறில், மது பாட்டிலால் தாக்கிக் கொண் டதில் 4 பேர் காயமடைந்த னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - திருச் செங்கோடு சாலையில், கீழ் காலனி என்ற பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் காவேரி ஆர்.எஸ் பகுதியைச் சேர்ந்த குமரேசன், சின்ன கவுண்டம்பாளையம் பகுதி யைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவர்களுடைய நண் பர்கள் வெள்ளியன்று மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே ஏற்பட்ட திடீர் தகராறில், மது பாட்டிலால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப் படுகிறது. இதில் தலை, கை உள்ளிட்ட இடங்களில் 4 பேருக்கு ரத்த காயம் ஏற்பட் டது. இதையடுத்து அருகிலி ருந்தவர்கள் அவர்களை பள்ளிபாளையம் அரசு மருத் துவமனையில் சிகிச்சைக் காக அனுமதித்தனர். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மின்தடை
ஈரோடு, நவ.9- ஈரோடு மாவட்டம், விஜய மங்கலம் துணை மின் நிலை யத்தில் நவ.12 ஆம் தேதி யன்று மாதாந்திர பராமரிப் புப் பணிகள் நடைபெற உள் ளது. இதனால் பெரியவீர சங்கிலி, சின்னவீரசங்கிலி, கைக்கோல பாளையம், வட மலை கவுண்டன்பாளையம், பச்சா கவுண்டன்பாளையம், கினிப்பாளையம், கிரேநகர், கரட்டூர், பாப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நவ.12 ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
காகிதக் கவர் தயாரிப்பு தொரவலூரில் இலவச பயிற்சி
திருப்பூர், நவ. 9 - திருப்பூர் மாவட்டம் தொரவலூர் பகுதியில் காகிதக் கவர், என்வளப், கிஃப்ட் பாக்ஸ் (பரிசுப் பெட்டி) மற்றும் அலுவலகக் கோப்பு (ஆபீஸ் ஃபைல்) தயாரிக்க இலவசப் பயிற்சி அளிக் கப்படுகிறது. 10 நாட்கள் முழு நேரப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வறு மைக்கோட்டிற்கு கீழ் உள்ள எழுதப் படிக்கத் தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட இரு பாலரும் விண்ணப்பிக்க லாம். பயிற்சி பெறுவோருக்கு மதிய உணவு, இரு வேளை தேநீர் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் ஒன்றிய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோச னைகள் வழங்கப்படும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க “கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், அனுப்பர்பாளையம் புதூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 9489043923, 9952518441, 8610533436 ஆகிய அலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். முதலில் வரு வோர்க்கு முன்னுரிமை வழங்கப்படும் என பயிற்சி நிலைய இயக்குநர் சதீஷ்குமார தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் அறிவிப்புக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு
திருப்பூர், நவ. 9 – திருப்பூர் மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதியின்றி சட்ட விரோ தமாக கனிமங்களை வெட்டி எடுத்துச் செல்லும் வாகனங்கள் கைப்பற்றப்ப டும் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் அறிவித்துள்ளதற்கு சுற்றுச்சூ ழல் ஆர்வலர்கள் வரவேற்புத் தெரி வித்துள்ளனர். அறிவித்தபடி ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும், இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டியெடுக் கப்படும் நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் உரிய அபராதம் மற்றும் குற்றவியல் நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் கிறிஸ்துராஜ் கூறியிருந்தார். திருப்பூர் மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதியின்றி அரசு புறம் போக்கு மற்றும் பட்டா நிலங்களில் சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுப் பது மற்றும் அனுமதியின்றி வாகனங்க ளில் எடுத்துச் செல்வது கனிமம் மற்றும் சுரங்கம் (மேம்படுத்ததல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1957 மற்றும் தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதி கள் 1959 ன் படி தண்டனைக்குரிய குற்ற மாகும். அனுமதியின்றி சட்ட விரோத மாக கனிமங்களை எடுத்து செல்வதை தடுப்பதற்கு, வருவாய் துறை, புவியி யல் மற்றும் சுரங்கத்துறை மற்றும் காவல் துறை மூலமாகவும் மற்றும்; வட் டாட்சியர் தலைமையில் செயல்படும் வட்ட அளவிலான கண்காணிப்புக்குழு வின் மூலமாகவும் கண்காணிக்கப் பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்தி ருக்கிறார். சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்துச் செல்லும் வாகனங்கள் கைப்பற்றப்படும், சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டியெடுக்கப்படும் நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் மீதும் உரிய அபராதம் மற்றும் குற்றவியல் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும், இது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க லாம் என்றும் ஆட்சியர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆட்சியரின் அறிவிப்பு வரவேற்கத் தக்கது. அதேசமயம் அறிவித்தபடி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் எதிர்பார்ப்பதாக சுற்றுச்சூ ழல் ஆர்வலர்கள் கூறினர்.
புது ராமகிருஷ்ணபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி தேர்தல்
திருப்பூர், நவ.9- திருப்பூர் புது ராமகிருஷ்ண புரம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் சனியன்று மாதிரி தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மாணவிகள் பொதுத் தேர்தலைப் போன்று தங்களுக்குள் பள்ளி வளர்ச்சி கட்சி என்றும் பள்ளி சாதனை கட்சி என இரு கட்சிகளாக பிரிந்து கொண்டனர். இதில் பள்ளி வளர்ச்சி கட்சியைச் சேர்ந்தவர்கள் பேனா சின்னத்திலும், பள்ளி சாதனை கட்சியை சேர்ந்தவர்கள் புத்தக சின்னத்திலும் போட்டி யிட்டனர். இதைதொடர்ந்து சக மாணவிகளிடம் தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த னர். தேர்தல் நடத்தும் அலுவலர்க ளாக சில மாணவிகள் பொறுப்பேற் றுக்கொண்டு தேர்தலை நடத்தினர். இதில் மாணவிகள் வரிசையில் நின்றபிடித்த மறைமுகமாக வாக்க ளித்தனர். இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள், சுற்றுகள் வாரியாக அறிவிக்கப்பட் டது. இரண்டு கட்சியினர் பெற்ற வாக்குகள், நோட்டாவிற்கு விழுந்த வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் வெற்றி பெற்ற கட்சியின் விவரம் குறித்து தேர்தல் அலுவலர்களால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேர் தலில் வெற்றி பெற்ற வேட்பாள ருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. புது ராமகிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் 1127 மாணவிகள் பயின்று வரக்கூடிய நிலையில் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியும், நீட் தேர் வில் இந்த பள்ளியைச் சேர்ந்த 2 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர் என் பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை காலத்தின் ஆர்டர்கள் அதிகரிக்கும்: சைமா எதிர்பார்ப்பு
திருப்பூர், நவ. 9 – தீபாவளி பண்டிகையை ஒட்டி பின்ன லாடை வணிகம் நன்றாக இருந்தது, இனிவ ரும் கிறிஸ்துமஸ், ஆங்கில புது வருடம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கான ஆர்டர் கள் மேலும் அதிகமாக வரும் என்று எதிர் பார்ப்பதாக தென்னிந்திய பின்னலாடை உற் பத்தியாளர் சங்கத் தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சனியன்று விடுத்துள்ள செய்தியறிக்கையில் கூறியிருப் பதாவது: தீபாவளி பண்டிகையை ஒட்டி பின் னலாடை வணிகம் நன்றாக இருந்ததாக கூறப் படுகிறது. இனிவரும் கிறிஸ்துமஸ், ஆங்கில புது வருடம், பொங்கல் பண்டிகைக்கான ஆர் டர்கள் மேலும் அதிகமாக வரும் என்று எதிர் பார்க்கிறோம். நமது பின்னலாடை உற்பத் திக்குச் சாதகமாக நூல் விலையும் கிலோ வுக்கு ரூ.10 குறைந்துள்ளதால் ஊக்கத்து டன் பின்னலாடை உற்பத்தியை தொடங்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும். பின்னலாடை, ஆயத்த ஆடைகள் ஏற்று மதிக்கான வாய்ப்புகள் அதிகமாகி வருவ தாக உணரப்பட்ட போதிலும், உள்நாட்டு உற் பத்தியும் அதிக தேவைக்கான வாய்ப்புகள் உருவாகி வருவதைப் புரிந்து கொள்ள முடி கிறது. எனவே சைமா சங்க உறுப்பினர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி நிதா னமாக, உறுதியான வளர்ச்சியை எட்ட வேண் டும். ஏற்கெனவே கூறியதுபோல் அரசுகளின் உதவியை எதிர்பாராமல் நமது தயாரிப்பு தரத்தில் கவனம் செலுத்தியும், நேர்மையான வணிகர்களை அடையாளம் கண்டும் தங்கள் வணிகத்தைச் சிறப்பாக செய்ய முயற்சி எடுக்க வேண்டும் என ஏ.சி.ஈஸ்வரன் கூறியி ருக்கிறார்.
குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் கூலிபாளையம் சாலை
திருப்பூர், நவ.9- ஊத்துக்குளி சாலை கூலிபாளையம் பகு தியில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி யளிக்கிறது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். திருப்பூரில் வாகனங்களை பயன்படுத் துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் வாகனங்க ளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சாலைக ளின் கட்டமைப்பு வலுவாக இல்லாத தால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிச லுக்கும், விபத்துகளில்சிக்குவதும் அதிகரித்து வருகிறது. திருப்பூர் - ஊத்துக்குளி சாலை மாநகரின் முக்கியப் பகுதியாக இருந்து வருகிறது. திருப் பூரில் இருந்து ஈரோடு, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்ல ஊத்துக் குளி சாலை கூலிபாளையம் நால்ரோடு பகு தியை கடந்து செல்ல வேண்டும். இவ்வழியே இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், கன ரக வாகனங்கள் என தினந்தோறும் ஆயி ரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின் றன. இந்நிலையில், இங்கு குடிநீர் குழாய் உடைந்து சீரமைக்கும் பணிக்காக தோண்டப் பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளன. மேலும், மூடப்பட்ட குழியின் மீது சாலை சீர மைக்கப்படாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறன. மேலும், குடிநீர் கசிவு ஏற் பட்டு சாலையில் குடிநீர் தேங்கியுள்ளது. தினந்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணா வதோடு, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டி களும் அவதிக்குள்ளாகினர். இரவு நேரங்க ளில் அங்கு பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகளும் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலை துறையினர் இதன் மீது உரிய கவனம் செலுத்தி உடனடியாக போக்குவரத்து நெரி சல் மிகுந்த சாலைகளில் உள்ள பள்ளங் களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.