districts

img

குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சீல்: ஆட்சியரிடம் மனு

கோவை, செப்.7- கோவை மாநகரில் குறுந் தொழில்  நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக்கோரி டேக்ட் சங்கத்தினர் கோவை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் மனு  அளித்தனர். இதுகுறித்து டேக்ட் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில் குறுந்தொழில் முனை வோர் கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் மனு அளித்தனர். இதில்,  கோவை மாநகராட்சி, 16 ஆவது  வார்டுக்குட்பட்ட இடையர் பாளையம் டி.வி.எஸ் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த குறுந்தொழில் நிறுனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் தொழில் முனைவோர்களுக்கு இது  போன்ற மாநகராட்சியின் நடவ டிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது. அந்த இரண்டு  தொழில் கூடங்களால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக புகார்  கொடுத்த நபரின் புகாரில் உண்மை இல்லை.  

இதுகுறித்து முறையான ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு நோட் டீஸ்க்கும் சம்மந்தப்பட்ட தொழில் முனைவோர்கள் பதில் அளித்து வந் துள்ள நிலையிலும், தொழில் முனை வோர் கொடுத்த எந்த நோட் டீஸ்க்கும் மாநகராட்சி நிரவாகம் பதில் தராமல் சீல் வைக்கும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த  நடவடிக்கை கோவையின் வளர்ச் சிக்கு காரணமாக இருந்து வரும் 30  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. எனவே, சீல் வைக்கப்பட்ட தொழில் கூடங்கள் இயங்கிட உடனடி யாக அனுமதி தந்து உதவ வேண்டும்.  மாநகராட்சி அதிகாரிகள் மாவட்ட தொழில் மையம் அதிகாரிகள் தொழில் அமைப்புகள் கொண்ட ஒரு குழுவை தங்கள் ஏற்படுத்தி உண்மையில் அங்கு இயங்கி வந்த  தொழில் கூடங்களால் பாதிப்பு உள்ளதா- என்று தங்கள் அறிக்கை பெற்று உண்மை நிலை கண்டறிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. இதுகுறித்து ஜேம்ஸ் கூறுகை யில், மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட தொழில் மைய அதி காரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை  ஆய்வுக்கு அனுப்பி அறிக்கை பெற்று மேற்கண்ட நடவடிக்கை எடுக்கிறோம் என்றும், இயந்தி ரங்கள் மழையில் நனைவதால்  பழுது அடைந்து வருவதும் எடுத்துக்  கூறினோம். அவர் இன்று ஆய்வு அறிக்கை பெற்று உறுதியாக மக்க ளுக்கு இடையூறு இல்லை என்றால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்தாக கூறி னார்.